உதகை, மார்ச் 12- உதகை அரசு தலைமை மருத்துவ மனையில் கொரோனா வைரஸிற் காக தனி வார்டு துவங்கப்பட்டு அனைத்து வசதிகளும் தயார் நிலை யில் உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத் திலும் பரவுவதை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்டம், உதகையில் கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக மாவட்ட எல்லைகளான நாடுகாணி, சோலாடி, தாளூர், நம்பி யார் குன்னு, பாட்டவயல் ஆகிய 5 சோதனை சாவடிகளிலும் மருத்துவ குழுவினர் முகாமிட்டு மருத்துவ பரிசோ தனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உதகை அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மாவட்டத் தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்க ளிலும் தேவையான முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ், ஆங்கிலம், மலை யாளம் ஆகிய 3 மொழிகளில் ஆடியோ வெளியிடப்பட்டு ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், உதகை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸிற்காக தனி வார்டு அமைக்கப்பட்டு தயார் நிலை யில் உள்ளது. மேலும், இம்மாவட் டத்தை பொறுத்த வரையில் எந்த பாதிப்பும் இதுவரையில் இல்லை எனவும், மாவட்டம் முழுவதும் கண்கா ணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் சுகாதார பணிகள் இணை இயக்குநர் பழனிச்சாமி தெரி வித்துள்ளார்.