tamilnadu

img

குன்னூர்: சரக்கு லாரி விபத்து - ஓட்டுநர் படுகாயம்

உதகை, செப்.11 - குன்னூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி ஒன்று மலை ரயில் பாதையில் விழுந்து விபத்துக்குள்ளா னது. கோவையில் இருந்து பார்சல்களை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று உதகை நோக்கி வந்து கொண்டிருந்தது. குன்னூர் அருகே வந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த லாரி, மலை ரயில் பாதையில் விழுந்து விபத்துக் குள்ளானது. இதில், ஓட்டுநர் சரவணன் என்பவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சரவணனை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.