உதகை, அக்.10 - பந்தலூரில் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப் பாசிரியர்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கூடலூர் கல்வி மாவட்ட பள்ளிகளில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின் பொறுப்பாசிரியர்களுக்கு செயலாக்க மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி முகாம் பந்தலூரில் உள்ள புனித சேவியர் பெண்கள் பள்ளி வளாகத்தில் வியாழனன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார். இதில், மையத்தின் செயலாளர் சிவசுப்பிரமணியம், கூட லூர் அரசு கலை கல்லூரி முதல்வர் வே.நெடுஞ்செழியன், கல்லூரியின் பேராசிரியர்கள், பந்தலூர் அரசு மேல்நி லைப்பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி, புனித சேவி யர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.