tamilnadu

img

என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்- உலக சுகாதார இயக்குநர் ட்வீட்

தன்னுடன் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் உலக சுகாதார இயக்குநர் டெட்ரோஸ் அதானெம் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். 

உலகம் முழுவதும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் ஊரடங்கு உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில்  கொரோனா தொற்றை கையாள்வதில் உலக நாடுகள் ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்தடுத்து வரும் சில மாதங்கள்  கடினமானதாக இருக்கப்போகிறது என்று உலக சுகாதார இயக்குநர் டெட்ரோஸ் அதானெம், எச்சரிக்கை விடுத்துள்ளார். 
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானெம் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில்

தன்னுடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார். தனக்கு அறிகுறிகள் இல்லை என்றும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்னும் சில நாட்களுக்கு சுய தனிமைப்படுத்துதலில் இருக்க உள்ளதாக கூறியுள்ளார்