tamilnadu

img

அமெரிக்க படைவீரர்கள் பயங்கரவாதிகள் ஈரான் நாடாளுமன்றம் அதிரடி அறிவிப்பு

டெஹ்ரான்,ஜன.7- ஈரான் ராணுவத் தளபதி ஜெனரல்  காஸிம் சுலைமானியை அமெரிக்கா  படுகொலை செய்ததற்கு பதிலடி யாக அமெரிக்கப் படையினரை பயங்கரவாதிகளாக அறிவித்து ஈரான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரான் மீது பல தடைகளை விதித்து, அராஜகமாக நடந்து கொள்ளும் அமெரிக்கா, இராக் தலைநகர் பாக்தாத்திற்கு வந்த ஈரான்  ராணுவத் தளபதி சுலை மானியை (வயது 62) வான்தாக்கு தல் நடத்தி படுகொலை செய்தது.இச்செயல்  உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி னால், இதுவரை இல்லாத அளவுக்கு மிக கடுமையான தாக்குதல் நடத்து வோம் என்று அமெரிக்க ஜனாதி பதி டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். 

இந்நிலையில், சுலைமானி  கொல்லப்பட்டதற்கு பதிலடியாக அமெரிக்க படைவீரர்கள் அனை வரையும் பயங்கரவாதிகளாக ஈரான் அறிவித்துள்ளது என்றும் இது தொடர்பாக ஈரான் நாடாளு மன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் சர்வ தேச ஊடகங்கள் செய்திகள்  வெளி யிட்டுள்ளன.  இதற்கிடையே,வருகின்ற வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஐ.நா. பாதுகாப்புக்கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிபுக்கு  விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ள தாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

;