மும்பையில் பெய்து வரும் கன மழையால் அந்தேரி, தாதர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அந்தேரி பாலம் தண்ணீரில் மூழ்கியதால், அந்த வழியாக போக்குவரத்து நிறுத் தப்பட்டது.
நெய்வேலி என்எல்சி நிறு வனத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் பலி எண் ணிக்கை 7 பேராக அதிகரித்துள்ளது.
இந்திய விமான நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி யுள்ளதாக விமானப் போக்குவரத்து ஆலோசனை நிறுவனமான சிஏபிஏ தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் குரேட் என்ப வர் சுமார் ரூ.2.89 லட்சம் மதிப் பில் தங்க முகக் கவசம் தயாரித்து அதனை அணிந்து வருகிறார்.
தூத்துக்குடியில் இருந்து வெள்ளிக் கிழமையன்று முதல் முறை யாக இரவில் விமானம் இயக்கப் பட்டது. தூத்துக்குடி - சென்னை இடையே 5 விமானங்களும், பெங்க ளூருவுக்கு ஒரு விமானமும் இயக்கப் பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் பாவனி சாகர் அணைக்கு வினாடிக்கு 381 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைப்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை சார்பில் அரசி தழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உலகில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் பிராவோ, Done “d war” என்கிற தலைப்பில் பாடல் பாடி வெளியிட்டுள்ளார்.