tamilnadu

img

சுவிட்சர்லாந்து நாட்டின் இந்திய தூதராக மோனிகா கபில் நியமனம்

தில்லி 
மத்திய ஐரோப்பா நாடான சுவிட்சர்லாந்து இயற்கை எழில் மிக்க அழகிய நாடாகும். 85 லட்சம் பேர் வசிக்கும் இந்நாட்டின் புதிய இந்திய தூதராக மோனிகா கபில் மோஹ்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் அதிக அனுபவம் பெற்றுள்ள மோனிகா கபில் 1985-ஆம் பேட்சின் ஐஎப்எஸ் அதிகாரியாவார். பிரான்ஸ், நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பணியாற்றியுள்ள மோனிகா சுவீடன்,  லாத்வியா, போலந்து மற்றும் லித்துவேனியா நாட்டுக்கான இந்திய தூதராகவும் இருந்துள்ளார்.   

குறிப்பாக பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் அமைந்துள்ள யுனெஸ்கோ அமைப்புக்கான இந்தியாவின் நிரந்தர குழுவிலும் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

;