சுவிட்சர்லாந்தில் சம ஊதியம் கேட்டு, பெண்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில், 28 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று 1000 கணக்கான பெண்கள் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு, பணியிடத்தில் சமத்துவம், பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதல்கள் ஆகியவற்றில் முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியும், வேலை இடங்களில் நிலவும் ஏற்றத் தாழ்வு ஒழித்து ஆண்களுக்கு நிகராக சம ஊதியம் வழங்க கோரியும், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்த போராட்டத்தில், வீட்டு வேலை செய்பவர்கள், ஆசிரியர்கள், வீட்டைக் கவனிப்பவர்கள் என பெண்கள் அதிக அளவில் செய்யும் வேலைகளுக்கு ஊதியங்களை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
சுவிட்சர்லாந்தில், சராசரியாக ஆண்களை விட பெண்கள் 20 சதவீதம் குறைவாக சம்பளம் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.