tamilnadu

img

கொரோனா பாதிப்பால் உயிரிழப்போரில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களே அதிகம்... அன்டோனியா குட்ரெஸ் கவலை

ஜெனிவா:
கொரோனா  தொற்றுநோய் பாதிப்பால் உலகெங்கிலுமுள்ள வயதானவர்கள் அதிக விகிதத்தில் இறந்து கொண்டிருக்கின்றனர். சொல்லப்படாத அச்சத்தையும் துன்பத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்துகிறது. குறிப்பாக 80 வயதிற்கு மேற்பட்டவர்களின் இறப்பு விகிதம் உலக சராசரியை விட ஐந்து மடங்கு அதிகம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தனிமைப்படுத்தல், அவர்கள் மீதான கட்டுப்பாடுகள் காரணமாக  துன்பங்களை எதிர்கொள்ளளும் வயதானவர்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டறிந்து அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்க முயற்சிக்க வேண்டுமெனவும் குட்ரெஸ் கூறியுள்ளார்.

;