tamilnadu

img

உலகில் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தைத் தாண்டியது....  

நியூயார்க் 
உலகைத் தனது உள்ளங்கையில் வைத்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாகச் சேதப்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் தொடர்ந்து வேகம் காட்டி வரும் இந்த கொரோனா வைரஸ் அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளை புரட்டியெடுத்து வருகிறது. இதில் ரஷ்யா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் கொரோனா பாதிப்பில் ஓடுகிறது என்றால் அமெரிக்கா பறக்கிறது. காரணம் அங்கு மற்ற நாடுகளை விட 10 மடங்கு கொரோனா பரவல் வேகம் அதிகரிப்பு தான். 

இந்நிலையில், உலகில் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தைக் கடந்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 15 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் ரஷ்யா (3.08 லட்சம்), ஸ்பெயின் (2.78 லட்சம்) ஆகிய நாடுகள் உள்ளன. அதே போல உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 3 லட்சத்து 25 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 93 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். பிரிட்டன் (35 ஆயிரம்), இத்தாலி (32 ஆயிரம்) ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளது.

ஆறுதல் செய்தியாக இதுவரை 19 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவை  வென்று வீடு திரும்பியுள்ளனர். அமெரிக்கா அதிகபட்சமாக 3.61 லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பியுள்ளது.

;