tamilnadu

img

தினமும் 60 ஆயிரத்தை தாண்டும் கொரோனா பாதிப்பு...  உலகின் கொரோனா மையமாக முளைக்கிறது இந்தியா...

தில்லி 
உலகை தனது உள்ளங்கையில் வைத்து மிரட்டி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தற்போது 180-க்கும் மேற்பட்ட நாடுகளின் இயல்பு நிலையை கடுமையாக பாதித்து வருகிறது. தினமும் 2.60 லட்சம் பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வரும் கொரோனா வைரஸ், நாள்தோறும் 6500 பேர் காவு வாங்கி வருகிறது. 

இந்நிலையில் கொரோனா எழுச்சி பெற்ற காலத்திலிருந்து கடந்த வாரம் வரை அமெரிக்கா தான் உலகின் கொரோனா மையமாக இருந்தது. ஆனால் அதனை இந்தியா தகர்த்து புதிய கொரோனா எழுச்சி மையமாக மாற உள்ளது. காரணம் அமெரிக்காவில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்துக்குள் உள்ளது. ஆனால் இந்தியாவில் தினசரி பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டி வருகிறது.  

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் 61,252 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா, பிரேசிலில் 54 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதே நிலை தொடர்ந்தால் விரைவில் உலகின் கொரோனா மையமாக இந்தியா மாறுவதில் எவ்வித சந்தேகமும் இல்லை.  

;