tamilnadu

img

சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வு: இணையதளத்தில் நுழைவுச் சீட்டு

 சென்னை,டிச.30- காவல்துறையின் சார்பு ஆய்வாளர் பத விக்கு விண்ணப்பித்தவர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும இணையதளத்தில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறி விக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் காலியாக உள்ள 969 சார்பு ஆய்வாளர்கள் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு, வரும் ஜனவரி 11 மற்றும்  12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக காவல்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எழுத்துத் தேர்வில் கலந்து கொள்வதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு www.tnusrbonline.org  என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்  யப்பட்டுள்ளதாகவும் விண்ணப்பதாரர்க ளின் கைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி யாக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.

;