tamilnadu

img

மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் வாக்கு சேகரிப்பு

நாமக்கல், ஏப்.1- நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாமக்கல்நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டார். இதில், திமுக ஒன்றிய செயலாளர் தங்கவேல், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் பி.டி.தனகோபால் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ள பலர் பங்கேற்றனர். முன்னதாக, மல்லசமுத்திரம் பேரூராட்சியிலும், ஒன்றியத்திலும், பல்லக்குலி,செண்பகமாதேவி, கூத்தாநத்தம், பில்லாநத்தம் மங்கலம், ராமாபுரம், பருத்திப்பள்ளி, கருங்கல்பட்டி, சோபனம்பட்டி, வையப்பமலை, கல்லு பாளையம், மஞ்சள் மரப்பரை நாகர்பாளையம், மின்னாம்பள்ளி, மொரங்கம், பாலமேடு கோட்டப்பாளையம் குப்பிச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

;