tamilnadu

அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர்க்கை பெற மே 31ல் கடைசி நாள்

நாமக்கல், மே 23-நாமக்கல் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில், மாணவ, மாணவியர் சேர்க்கை பெற மே 31 ஆம் தேதி கடைசி நாள் என்று பயிற்சி அலுவலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் அரசு தொழிற் பயிற்சி நிலைய பயிற்சி அலுவலர் த.அமானுல்லா பாஷா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இரண்டு ஆண்டு படிப்பாக எலக்ட்ரீசியன், டிராப்ட்ஸ்மேன் (சிவில்), மெஷினிஸ்ட் ஆகிய தொழிற் பிரிவுகளுக்கும், ஓராண்டு படிப்பாக மெக்கானிக் ஆட்டோபாடி ரிப்பேர் ஆகிய தொழிற் பிரிவிற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பெண்களுக்கு மட்டும் ஓராண்டு படிப்பாக கம்ப்யூட்டர் ஆபரேட்டர், புரோகிராமிங் அசிஸ்டென்ட்  மற்றும் டெஸ்க்டாப் பப்ளிஸிங் ஆபரேட்டர் போன்ற தொழிற் பிரிவுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.மேலும், அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் காலத்தில் கட்டணம் முற்றிலும் இலவசம், மாதம் ரூ.500 உதவித்தொகை, இலவச லேப்டாப், சைக்கிள், பாடப்புத்தகங்கள், சீருடை, காலணி, வரைபடக் கருவிகள் மற்றும் இலவச பேருந்து அட்டை ஆகியவை வழங்கப்படுகின்றன. பயிற்சி முடிந்தவுடன் மத்திய அரசால் தொழிற்தேர்வு நடத்தப்பட்டு தேசிய தொழிற் சான்று வழங்கப்படுகிறது. முன்னணி நிறுவனங்கள் மூலம் நேர்காணல் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பிற்கான உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இப்பயிற்சிகளில் சேர விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் கீரம்பூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் உரிய சான்றிதழ்களுடன் வரும் மே 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 04286-267976, 9442053732, 8610530243 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;