நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் தெரு அருகே சிலிண்டரை மாற்றும்போது கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் தெரு அருகே சிலிண்டரை மாற்றும்போது கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பார்த்தசாரதி (70), அவரது மனைவி தனலட்சுமி (60), தனியார் கேஸ் ஏஜென்சி ஊழியர் அருண்குமார் (25) ஆகியோர் விபத்தில் காயமடைந்தனர்.
படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட பார்த்தசாரதி, தனலட்சுமி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கேஸ் ஏஜென்சி ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.