tamilnadu

வேளாண் அறிவியல் மையம் பெயரில் போலிக் குழுக்கள் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியர்

நாமக்கல், நவ.5- வேளாண் அறிவியல் மையம் பெயரில் செயல்படும் போலிக் குழுக்களிடம், விவசா யிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டு மென மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள் அறிக்கையில் தெர்வித்துள்ளதாவது, கோவை தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகத்தின் கீழ் வேளாண்மை அறி வியல் மையக்குழு ஒன்று செயல்பட்டு வரு கிறது. இதேபோன்று கடந்த சில ஆண்டு களாக கிரிஷி விகாஸ் கேந்திரா போன்ற கற் பனையான நிறுவனங்கள் பெயரில் முறை யற்ற குழுக்கள் தமிழகத்தில் செயல்படுவ தாகவும், அவை விவசாயிகளை ஏமாற்றி பணம் பெறுவதாகவும் தெரியவந்துள்ளது.   எனவே, நாமக்கல் மாவட்ட விவசா யிகள் இது போன்ற முறையற்ற குழுக்களில் இணைந்தோ அல்லது விவசாயிகளிடம் பணம் வசூல் செய்து வரும் குழுக்களின் சட்ட  விரோதமான நடவடிக்கைகளுக்கு துணை  நிற்கவோ வேண்டாம் எனவும், விவசாயி கள் எச்சரிக்கையாக இருக்கவும், தீங்கு  விளைவிக்கும் இக்குழுக்கள் மற்றும் அவற்றின் நடவடிக்கைகள் தெரியவந்தால்  உடனடியாக நாமக்கல் வேளாண்மை அறிவியில் மையத்தில் தெரிவிக்க வேண் டும் எனவும் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள் ளார்.