tamilnadu

img

எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் திமுக கூட்டணி உறுப்பினர்கள் வெளியேற்றம்

திருச்செங்கோடு, ஜன. 11- எலச்சிபாளையம் ஊராட்சி ஒன் றிய தலைவரை தேர்ந்தெடுப்பதற் கான கூட்டத்தில் திமுக கூட்டணி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய 13 உறுப்பினர் பதவிக்கான  தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.  இதில் அதிமுகவினர் 8 பேரும், திமுக வின் மல்லிகா, விஜயா, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் சு.சுரேஷ், கொமதேக பூங்கொடி மற்றும்  சுயேட்சை ஒருவரும் வெற்றி பெற்ற னர். இதைத்தொடர்ந்து சனியன்று ஒன்றிய தலைவரைத் தேர்வு செய்ய  உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற் றது. அப்போது, அனைவரிடமும் வருகை பதிவேட்டில் கையொப்பம் இடுமாறு வட்டார வளர்ச்சி் அலுவ லர் விஜயகுமார் கூறினார். அப் போது, திமுக கூட்டணி உறுப்பினர் கள் தலைவரை தேர்வு செய்வதில் உடன்பாடு இல்லை என்று கூறி கையொப்பமிட மறுத்தனர். கையொப் பம் இடாவிட்டால் வெளியேறுங்கள் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் கூறினார். இதனால் அவர்கள் நால் வரும் வெளியேறினர். இதனால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தலைவரைத் தேர்வு செய்ய தேர்தல் நடத்தும் அலு வலர் மாரிமுத்து ராஜூ விண்ணப்பம் பெற்றார். இதில் அதிமுக உறுப்பினர் ஜெயசுதா சக்திவேல் மட்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட மனு அளித்தார். வேறுயாரும் மனு செய்யாததால் ஜெயசுதா சக்திவேல் தலைவராக தேர்வு பெற்றார். அவருக்கு தேர்தல் அலுவலர் சான்றிதழை வழங்கினார். இதேபோல், துணைத்தலைவர் பத விக்கு அதிமுக உறுப்பினர் தீபா  கிருஷ்ணமூர்த்தி மனு அளித்தார். வேறு யாரும் போட்டியிட மனு அளிக் காததால் அவரும் துணைத்தலைவ ராக அறிவிக்கப்பட்டார்.

;