tamilnadu

img

சாக்கடை கால்வாய் அமைக்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

நாமக்கல், ஆக.18 - நாமக்கல் மாவட்டம், ராசிபுரம்  ஒன் றியம் காக்காவேரி ஊர் பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சி 3ஆவது வார்டு மேட்டுத் தெருப்  பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் முறை யான சாக்கடை கால்வாய் அமைக்கப் படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குட்டை போல் தேங்கி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனை சரி  செய்துவிட வேண்டும் என இப்பகுதி மக்கள்  தொடர்ந்து அதிகாரிகளை வலியுறுத்தி வந்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதனால் ஆவேசமடைந்த இப்பகுதி  மக்கள் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய  அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். சாக்கடை கழிவு நீரால் பல்வேறு தொற்று வியாதிகள் பரவி  வருகின்றன  சுகாதாரத்தை பாதுகாத்திட  போர்க்கால அடிப்படையில் சாக்கடை கால் வாய்கள் அமைத்து தரவேண்டுமென முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து அதி காரிகள் பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் முறை யான சாக்கடை கால்வாய் அமைக்க நடவ டிக்கை எடுக்கப்படுமென கூறியதை யடுத்து பொதுமக்கள் போராட்டத்தை  கைவிட்டு கலைந்து சென்றனர்.

;