கடலூர், அக்.20- நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நகர நிர்வாக அலுவலகத்தை பொது கான்ட்ராக்ட் தொழி லார்கள்-ஊழியர்கள் சங்கமும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மும் இணைந்து முற்றுகை யிட்டன. என்எல்சி இந்தியா நிறுவன நகர நிர்வாகத்தின் கீழ் வட்டம் 5-இல் உள்ள சாலை பராமரிப்பு அலு வலகத்தில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தத் தொழிலாளர்களின் ஏடிஎம் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், அடை யாள அட்டைகளை ஒப்பந்த உரிமையாளர்கள் பெற்றுக் கொண்டனர். இவை களை ஒப்படைக்காத 8 தொழிலாளர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக பணி வழங்கவில்லை. இதுதொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த காத்தி ருப்பு போராட்டம் நடத்தப் பட்டது. புதுச்சேரி தொழி லாளர் உதவி ஆணையரு டன் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தியதில், தொழிலாளர்களை பணிக்கு சேர்த்துக்கொள்ள வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர் அறி வுறுத்தினார். அதன் பின்ன ரும் என்எல்சி நகர நிர்வாகம் 8 தொழிலாளர்களுக்கு பணி வழங்கவில்லை. இதைக் கண்டித்து, என்எல்சி பொது கான்ட்ராக்ட் தொழிலாளர் ஊழியர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நெய்வேலி என்எல்சி நகர நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.அமிர்தலிங்கம் தலை மையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.மாதவி, நகரச் செயலாளர் தன லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.