tamilnadu

img

போக்குவரத்துக்கு இடையூறாகும் சீமைக் கருவேல முள் செடிகள்

கொள்ளிடம், மே 3-நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சரஸ்வதி விளாகம் கிராமத்திலிருந்து கீரங்குடி, கொன்னக்காட்டுப்படுகை, மாதிரவேளுர் மற்றும் பாலூரான்படுகை வரை உள்ள 5 கிலோ மீட்டர் தூர தார்ச்சாலையின் இரு புறங்களிலும் சீமைக்கருவேல முட்செடிகள் நீண்டு வளர்ந்து சாலையை பெரும்பகுதி மூடியுள்ளது. இதில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த அவதியுடனேயே சென்று வருகின்றனர். பலர் காயம் அடைந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த சாலைதான் பிரதான சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆண்கள் மற்றும் பெண்கள் சீமைக்கருவேல முட்செடிகள் பட்டதுகுறித்து கிராம மக்கள் சார்பில் பல முறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் சரஸ்வதி விளாகம் முதல் பாலூரான்படுகை கிராமம் வரை சாலை மிகவும் மோசமடைந்துள்ளது. எனவே சாலையை மேம்படுத்தவும், சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சீமைக்கருவேல முட்செடிகளையும் அடியோடு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

;