நாகர்கோவில்:
நாகர்கோவில் இராணித்தோட்டம் அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தொமுச பொருளாளர் டி.கனகராஜ் தலைமை வகித்தார். சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்க செயல்தலைவர் எம்.லட்சுமணன், ஸ்டீபன் ஜெயக்குமார், ஏஐடியுசி பொதுச்செயலாளர் எல்.நீலகண்டன், டிடிஎஸ்எப் நிர்வாகி எஸ்.சண்முகம், எச்எம்எஸ் நிர்வாகி முத்துக்கருப்பன், எம்எல்எப் நிர்வாகி சந்திரன், எச்எம்எஸ் மாநிலதலைவர் சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் பேசினர். தொழிற்சங்க நிர்வாகிகள் எப்.எஸ்.எ.லியோ, ராஜன், செல்வமுத்து, ஆறுமுகம்பிள்ளை கலந்து கொண்டனர். மார்த்தாண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு நிர்வாகி சசிகுமார் தலைமை வகித்தார். தொமுச நிர்வாகி செந்தில், சிஐடியு நிர்வாகி சுரேஷ் குமார் பேசினர்.