tamilnadu

img

தையல் கலைஞர்களுக்கு  நிவாரணம் கோரி  தமிழக முதல்வருக்கு மனு  

 நாகர்கோவில்:
தையல் கலைஞர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை கால நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்க பொதுச்செயலாளர் சந்திரகலா தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விபரம் வருமாறு,உலக நாடுகள் முழுதும் கொரோனா வைரஸ் எனும் கொடிய நோய் பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயிலிருந்து மக்களை பாதுகாக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டுக்குரியது. இது போன்று தமிழ் நாட்டில் தையல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும் பகுதி பெண்கள் ஆவர் . அதிலும் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள் என மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தான் தையல் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

எனவே வாரியத்தில் பதிவு செய்த தையல் கலைஞர்களுக்கும், அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு இலவச பள்ளி சீருடை தைக்கும் தையல் கூட்டுறவு பெண்களுக்கும் கொரோனா வைரஸ் கால நிவாரணமாக ரூபாய் 5000 வழங்கிட நடவடிக்கை எடுக்கவும், மேலும் இலவச பள்ளி சீருடை 2019 ஆம் ஆண்டு தைத்த 4 செட் துணிகளுக்கான கூலி  வழங்கப்படாமலே உள்ளது. உடனடியாக கூலியும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

;