tamilnadu

img

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

சீர்காழி, பிப்.9- சீர்காழி அருகே புத்தூரில் திருமயிலாடி செல்லும் சாலையை ஒட்டி ஊராட்சிக் குப்பை கள் தினந்தோறும் கொட்டப்பட்டு வரு கின்றன. தொடர்ந்து ஒரே இடத்தில் கொட்டப்ப டுவதால் குவியலாகக் கிடக்கிறது. பாசன வாய்க்கால் அருகேயும் முக்கிய நெடுஞ்சா லையின் ஓரத்திலும் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள், பாலீதீன் பைகள் மற்றும் இறந்த விலங்கினங்களும் ஒரே இடத்தில் ஊரா ட்சி சார்பில் கொட்டப்படுகின்றன. எப்போதும் வாகனப் போக்குவரத்து மற்றும் ஆள்நடமாட்டம் இருந்து கொண்டே யிருக்கும் இடத்திலும், கடைகள் உள்ள இடத்திலும் குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. ஊராட்சி சார்பில் மக்கும் குப்பை மற்றும்  மக்காத குப்பைகளை தரம்பிரிப்பதற்கும் அதனை பாதிப்பு இல்லாமல் கையாள்வ தற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ள நிலை யிலும், ஊராட்சிகள் தோறும் குப்பைத்  தொட்டிகள் ஒதுக்கப்பட்ட போதிலும் குப்பை களை சாலையோரம் கொட்டப்படுகிறது. சுகாதாரத்தை பாதிக்காமல் இருக்கும் வகை யில் குப்பையை முறையாக சேகரித்து உரிய  இடத்தில் கொட்டவும் பொது இடத்தில் கொட்டுவதை உடனடியாக தடை செய்ய வும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி க்கை விடுக்கப்பட்டுள்ளது.

;