districts

img

மயானச் சாலையை மறித்து கொட்டப்படும் குப்பைகள்

மயிலாடுதுறை, ஜன 22- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூர் கிராமத்தில் மயானத்துக்கு செல்லும் சாலை உள்ளது. சுமார் 3000-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வரும் இந்த கிராமத்தில் மயானத்துக்கு செல்லும் பாதை மிகவும் கரடு முரடாக உள்ளது.  இச்சாலையின் நடுவே கிராமத்தில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் ஒட்டுமொத்தமாக மயான சாலையை அடைத்துக் கொண்டு கொட்டப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு சுமந்து செல்லவும், அமரர் ஊர்திகளில் எடுத்துச் செல்லவும் சிரமம் ஏற்படுகிறது. இங்குள்ள மயான சாலையின் நடுவில் கொட்டப்படும் குப்பைகளில் பழைய டயர்கள், உடைந்த பாட்டில் ஓடுகள், தேங்காய் மட்டைகள், மக்காத பிளாஸ்டிக் பொருட்கள், இறந்த விலங்குகளின் பாகங்கள் உள்ளிட்டவை கொட்டப்படுவதால், சுற்றுப்புறச் சுகாதாரத்துக்கும் கேடு ஏற்படுகிறது.  எனவே மக்கள் நலன் கருதி மயானச் சாலையின் நடுவே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.