tamilnadu

img

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்பு

நாகப்பட்டினம், ஜூன் 15- தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாட்டு வரவேற்புக் குழு  அமைப்புக் கூட்டம் நாகப்பட்டினத் தில் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம் நாகை ஒன்றியம் சிக்கல் கடைத்தெருவில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்  கத்தின் 30 ஆவது மாநில மாநாடு  நடைபெறுவதையொட்டி வரவேற்பு  குழு அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்ட செய லாளர் கோவை.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். காவிரி பாயும்  கடைமடை பகுதியான நாகை மாவட்  டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்  கத்தின் மாநில மாநாடு வரவேற்புக்  குழு அமைப்புக் கூட்டம் எழுச்சிகர மாக நடைபெற்றது.  அடுத்து வருகிற 3 மாதங்களும் நாகை மாவட்டத்தில் உள்ள ஒவ்  வொரு விவசாயிகள் குடும்பத்திற் கும் நேரடியாக சென்று மாநாட்டின்  நோக்கம் குறித்தும், நிதி ஆதாரங்க ளைத் திரட்டுவது குறித்தும் திட்ட மிடப்பட்டது. செங்கொடி இயக்கத் தின் ஜீவ நாடியாக விளங்கும் கீழத்  தஞ்சையின் விவசாயிகளும், விவ சாயத் தொழிலாளர்களும் இணைந்து கட்டிக்காத்த, உழைக்கும் மக்க ளின் மகத்தான இயக்கத்திற்கு புத்து ணர்ச்சி ஊட்டும் விதத்தில் இம் மாநாடு அமையும் என வாழ்த்துரை வழங்கப்பட்டது. 63 உறுப்பினர்கள் அடங்கிய வர வேற்பு குழு அமைக்கப்பட்டது.

வர வேற்புக் குழுவின் தலைவராக கீழ்  வேளூர் சட்டமன்ற உறுப்பினரும், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரு மான வி.பி.நாகைமாலி தேர்வு செய்  யப்பட்டார். அனைத்து வர்க்க வெகு ஜன இயக்கங்களும் இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது என சூளு ரைக்கப்பட்டது. இந்த வரவேற்பு குழு அமைப்பு  கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின்  மாநில செயலாளர் சாமி.நாடராஜன் மாநாட்டின் நோக்கம் குறித்து பேசி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி, தமிழ்  நாடு விவசாயிகள் சங்க மாநில தலை வர் வி.சுப்பிரமணியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செய லாளர் ப.சுபாஷ் சந்திரபோஸ், மாதர்  சங்க மாவட்ட தலைவர் எஸ்.சுபா தேவி, வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.வடிவேல், சிஐடியு மாவட் டச் செயலாளர் கே.தங்கமணி ஆகி யோர் கலந்து கொண்டனர்.

;