கரூர், மே 15 -சிஐடியு கரூர் மாவட்ட 8-வது மாநாட்டு வரவேற்புக் குழு கூட்டம் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமையில் கரூர் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது.ஜூன் 30-ம் தேதி கரூரில் நடைபெற உள்ள சிஐடியு 8-வது மாவட்ட மாநாடு தயாரிப்பு பணிகள் சம்பந்தமாக மாவட்டச் செயலாளர் முருகேசன் விளக்கி பேசினார். மாநாட்டினை வழி நடத்திச் செல்வதற்கு வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜோதிபாசு வரவேற்புக் குழு தலைவராகவும், டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி செயலாளராகவும் மதியழகன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.மேலும் காப்பீட்டு கழக தஞ்சை கோட்ட துணைத் தலைவர் கணேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்டத் தலைவர் மகாவிஷ்ணன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஜெயராஜ், அஞ்சல் துறை விஸ்வநாதன், வங்கி ஊழியர் சங்க வெங்கடேசன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க நிர்வாகி ஜான் பாட்ஷா மற்றும் சிஐடியு மாவட்ட நிர்வாகிகளை உள்ளடக்கிய 13 துணை தலைவர்களும், 11 உதவி செயலாளர்கள் உள்ளிட்ட 71 பேர் கொண்ட வரவேற்புக் குழு தேர்வு செய்யப்பட்டது.சிஐடியு கரூர் மாவட்ட 8-வது மாநாட்டினை சிறப்பாக நடத்துவதோடு சென்னையில் நடைபெற உள்ள அகில இந்திய மாநாட்டிற்கு மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிதி கோட்டாவினை விரைந்து தொழிலாளர்கள் மத்தியில் வசூல் செய்து முடிப்பதென முடிவு செய்யப்பட்டது. நகரக் குழுவின் சார்பாக ரூ.25,000, கட்டுமான சங்கத்தின் கரூர் ஒன்றியக் குழு சார்பாக முதல் தவணையாக ரூ.5000 வழங்கப்பட்டது.சிஐடியு நிர்வாகிகள் குப்பம் கந்தசாமி, ராஜாமுகமது, காதர்பாட்சா, சாந்தி, மதியழகன், கிருஷ்ணமூர்த்தி, ஹோசிமின் மற்றும் அனைத்து இணைக்கப்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள், மத்திய தர தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.