tamilnadu

img

ஏவிசி கல்லூரியில் கருத்தரங்கம்

மயிலாடுதுறை, பிப்.22- மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏ.வி.சி.கல்லூரி தமிழாய்வுத் துறையின் திண்ணை அமைப்பின் சார்பாக ‘இலக்கியமும் வரலாறும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.  இதற்கு தமிழாய்வுத்துறைப் பொறுப்புத் தலைவர் முனை வர் இரா.மஞ்சுளா முன்னிலை வகிக்க, தமிழாய்வுத்துறை உத விப் பேராசிரியர் முனைவர் கனிமொழி தலைமை வகித்தார். நிகழ்வில் முனைவர் ச.அருள், ‘வரலாற்றியல் அணுகு முறை’ என்ற தலைப்பிலும் முனைவர் சு.இரமேஷ் ‘புனைவு  இலக்கியங்களில் வரலாறும் புனைவும்’ என்ற தலைப்பிலும் முனைவர் இரா.தேவேந்திரன் ‘வரலாற்றுப் புதினங்களில் கதைக்கருவும் கதைக்களனும்’ என்ற தலைப்பிலும் நிகழ்த்தினர்.
இயற்பியல் ஆய்வுத்துறை 
ஏவிசி கல்லூரி இயற்பியல் ஆய்வுத்துறை நியூட்டன் பாண்ட் மாணவர் மன்றம் சார்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடை பெற்றது. கல்லூரியின் முன்னாள் இயற்பியல் துறை மாணவி  மற்றும் அலாமா அபாகஸ் பயிற்சி மைய நிறுவனர் மற்றும்  தென்னிந்திய மகளிர் சாதனையாளர் விருது (2019) பெற்ற வருமான பத்மாவதி முத்துக்குமார் கலந்து கொண்டார்.

;