தரங்கம்பாடி, டிச.9- நாகை மாவட்டம், பொறையார் அருகே யுள்ள எருக்கட்டாஞ்சேரி வடக்கு மேட்டுத் தெருவில் வசிக்கும் சரோஜா என்பவரின் மரு மகளும், அம்பேத்குமாரின் மனைவியுமான இலக்கியா மற்றும் 8 ம் வகுப்பு படித்து வந்த அபி, 5 ஆம் வகுப்பு படித்த அபிநிஷா, 3 ஆவது படித்து வந்த தருண் ஆகிய 3 குழந்தைக ளுடன் 2 மாதங்களுக்கு முன்பு காணாமல் போய் விட்டதாகவும், பொறையார் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லையென ஆட்சி யருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். யாரேனும் கடத்தி சென்றுள்ளனரா? அவர்களால் தனது பேரக் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் உள்ளதாகவும், இதுவரை எங்கு இருக்கிறார்கள் என்ற ஒரு தகவலும் இன்றி தவித்து வருவதாக சரோஜா கண்ணீர் மல்க கூறுகிறார். உடனடியாக மாவட்ட ஆட்சி யர் நடவடிக்கை எடுத்து காணாமல் போன நால்வரையும் கண்டுபிடித்து தர வேண்டு மென கோரிக்கை விடுத்துள்ளார்.