tamilnadu

நாகப்பட்டினம் ‘சிவப்புப் புத்தக’ வாசிப்பு இயக்க பயிற்சி முகாம்

நாகப்பட்டினம், பிப்.9- காரல்மார்க்ஸ்-ஏங்கல்ஸ் ஆகிய மாமேதைகள் மானு டத்திற்கு வழங்கிய அரிய பொக்கிசமான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கைப் புத்தகத்தைப் பர வலாக மக்களிடம் கொண்டு செல்வதற்காக, பிப்ரவரி 21 அன்று ‘சிவப்புப் புத்தக’  வாசிப்பு இயக்கம் நடை பெற இருக்கிறது. இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவ ட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரை ‘சிவப்புப் புத்தக’ வாசிப்பு இயக்க ஆசி ரியர்களாகத் தயார்ப்ப டுத்தும் பொருட்டு, நாகை  மாவட்டம், வெண்மணி  தியாகிகள் நினைவால யத்தில் பயிற்சி முகாம் நடை பெற்றது. பயிற்சி முகாமிற்கு கட்சியின் மாவட்டச் செய ற்குழு உறுப்பினரும் மாவ ட்டக் கல்விக்குழு ஒருங்கி ணைப்பாளருமாகிய எஸ்.துரைராஜ் தலைமை வகி த்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.ஸ்டாலின் வர வேற்றார். சிபிஎம். மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் நாகை மாலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயற்குழு உறுப்பின ரும் கட்சியின் மாநிலக்  கல்விக்குழு ஒருங்கி ணைப்பாளருமாகிய என்.குணசேகரன், இந்தச் சிவப்பு  புத்தக வாசிப்பு இயக்கத்தை  எவ்வாறு எளிமையாக மக்களிடம் கொண்டு செல்வது என்று விளக்கவு ரையாற்றினார். இந்தப் பயிற்சி முகா மில் சிபிஎம். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பி னர்கள், நாகை நகரப் பொ றுப்புச் செயலாளர் சு.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;