tamilnadu

நாகப்பட்டினம் முக்கிய செய்திகள்

இரவு நேர டீக்கடைக்கு அனுமதி வழங்க கோரிக்கை 
சீர்காழி, மே 30-நாகை மாவட்டம் கொள்ளிடம் கடைவீதியில் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 20 டீக் கடைகளும், ரயில் நிலையம் செல்லும் சாலையில் 15 டீக் கடைகளும்உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் இரவு 11 மணியுடன் நிறுத்தப்பட்டு பின்னர் அதிகாலை முதல் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை எனக் கூறி இரவு 11 மணிக்கு மேல் டீக் கடை வைக்கக் கூடாது என்றும் காவல்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளதுஇதுகுறித்து டீக்கடை உரிமையாளர்கள் சிலர் கூறுகையில், இரவு நேர கடை வைத்திருக்கும் அனைவரும் ஏழைத்தொழிலாளர்கள், இரவு நேரங்களில் வாகங்கனங்களில் செல்வோர்களுக்கும், மருத்துவமனையில் உள்ளவர்களுக்கும் இரவு நேர டீக்கடை ஒரு உதவியாகவும், வாய்ப்பாகவும் இருக்கிறது. இரவு நேர கடையை நிறுத்துவதன் மூலம் ஏழைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே ஏழைத்தொழிலாளர்களின் நலன்கருதி இரவு 11 மணிக்கு மேல் டீக்கடை வைத்து நடத்த மாவட்டஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஆச்சாள்புரம் கூட்டுறவு சங்கத்துக்கு புதிதாக தேர்தல்
சீர்காழி, மே 30-நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு விவசாயிகள் சுமார் 3060பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்துக்குகடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஒருதலைவர் மற்றும் 10 பேர் இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.இதுகுறித்து ஆச்சாள்புரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், சென்னைஉயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆச்சாள்புரம் தொடக்க வேளண்மை கூட்டுறவு சங்கத்துக்கு நடைபெற்ற தேர்தலில் 62 பேர் மனு தாக்கல் செய்தனர். இதில் ஒரு தலைபட்சமாக 11 மனுக்கள் மட்டும்ஏற்றுக் கொள்ளப்பட்டு உரிய ஆவணங்கள் இருந்தும் மீதமுள்ள அனைத்துமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதில் விதிமீறல் நடந்ததாக குறிப்பிட்டிருந்தார். பல கூட்டுறவு சங்கங்கள் தேர்தல் புகார் சம்பந்தமாக நீதிமன்றத்தில்வழக்கு தொடுத்ததால் இந்த வழக்குகளை விசாரிக்க சென்னை, மதுரை,திருச்சி, கோவை ஆகிய 4 மண்டலமாக பிரித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் ஆச்சாள்புரம் தொடக்க வேளண்மை கூட்டுறவு சங்கத்தேர்தல் வழக்கு திருச்சி மண்டலக்குழு வழக்காக திருச்சி நீதிமன்றத்தில்நடைபெற்றது. விசாரணையை தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 24.05.2019 அன்று வெளியானது. இதில் ஆச்சாள்புரம் கூட்டுறவுசங்கத் தேர்தலை ரத்து செய்து, முறைப்படி உறுப்பினர்கள் கொண்ட மறுவரைவு வாக்காளர் பட்டியல் தயாரித்து 3 மாதத்திற்குள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து புதிதாக தேர்தல் நடத்த ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.