tamilnadu

ஆலாலசுந்தரம் ஊராட்சியில் வீடு வசதியின்றி 300 குடும்பங்கள் தவிப்பு

சீர்காழி, ஜன.21- சீர்காழி அருகே ஆலாலசுந்தரம் ஊராட்சி மக்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்க கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.  நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள ஆலாலசுந்தரம் ஊராட்சியில், மாணிக்கவாசல், திருஞானசம்மந்தம், கூட்டுமாங்குடி, பெரிய ஆலாலசுந்தரம், சின்னஆலாலசுந்தரம், அழகியநத்தம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் மொத்தத்தில் ஆயி ரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.  இதில் 700 குடும்பங்களைச் சேர்ந்த வர்களுக்கு சொந்த வீட்டுமனையுடன் கூடிய வீடுகள் உள்ளன. ஆனால் 300 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மொத்தமாக வீட்டுமனைப் பட்டா இல்லாமல், சாலையோரத்திலும் வாய்க்கால் கரையிலும் குடிசை போட்டு பாதுகாப்பின்றி வசித்து வருகின்றனர். ஆரம்ப காலத்திலிருந்து சொந்த வீட்டு மனைப்பட்டா இல்லாமல் மிகவும் ஏழ்மையான நிலையில் வசித்து வரு கின்றனர். இவர்கள் விவசாயக் கூலித் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வரு கின்றனர்.  வருடந்தோறும் பழுதடைந்த குடிசை வீடுகளை மீண்டும் பிரித்து கட்டிக் கொள்ள முடியாதபடி குழந்தை களுடன் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர்.  சுதந்திரமடைந்து 70 வருடங்களை கடந்தும், ஆலாலசுந்தரம் கிராமத்தில் 300 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமாக குடியிருக்க வீட்டு மனை இல்லை. இதே ஆலாலசுந்தரம் ஊராட்சியில் திருஞானசம்மந்தம் கிரா மத்தில் அரசு புறம்போக்கு நிலம் 4 ஏக்கர் உள்ளது. இந்த நிலத்தை அரசு எடுத்து வீட்டு மனை இல்லாத குடும் பத்தை சேர்ந்தவர்களுக்கு உடனடி யாக வீட்டு மனைகள் வழங்கி அரசின் கான்கிரீட் வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

;