tamilnadu

img

நாகப்பட்டினத்தில் தொடர் கனமழை வீடுகள் இடிந்தன.... வீதிகளில் வெள்ளம்

நாகப்பட்டினம்:
‘புரெவி’ புயல் காரணமாக பலத்த காற்றும் கடந்த 5 நாட்களாகத் தொடர்ந்து இடைவிடாது கொட்டும் கனமழையாலும் நாகை மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த நவம்பர் 22 (‘நிவர்’ புயல் எச்சரிக்கை) முதல் 14 நாட்களுக்கு மேலாகக் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளது. வேதாரணியம், கோடியக்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. உப்பளத் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழந்து நிற்கிறார்கள்.தொடர்ந்து கனமழை பெய்வதால் மக்கள் வெளியே செல்ல முடியவில்லை. வேலை இல்லாததால் தொழிலாளர்கள் வாழ்வு நிலையும் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது.  

வீடுகள் விழுந்தன
நாகை நம்பியார் நகரில் மீனவர்கள் இருவரின் வீடுகள் கனமழையால் இடிந்துவீழ்ந்தன. இதுபோல் பாப்பாகோயில் கிராமத்தில் தாழ்வான பகுதிகளில் வீடுகளில்மழை நீர் புகுந்தது. புதிய நம்பியார் நகர், கல்லார், அந்தணப்பேட்டை, செல்லூர் ஆகிய சுனாமிக் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. நாகை மாவட்டத்தில் மிக அதிகமாக கொள்ளிடத்தில் வெள்ளிக்கிழமை 24 மணி நேரத்தில் 36 செ.மீ. மழை பெய்துள்ளது. நாகை மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகளில் மழை நீர் வாய்க்காலாய் ஓடுகிறது.

;