tamilnadu

கொள்ளிடம் பகுதியில் 5 பேருக்கு கொரோனா தொற்று தவறான தகவல் கூறிய 7 பேர் கைது

சீர்காழி, ஜூன் 23- நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த 2 நாட்கள் முன்பு வரை 14 பேருக்கு கொ ரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் வட்டார மருத்துவ அலுவலர் பபிதா, சுகாதார ஆய்வாளர் கருணாகரன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் கொள்ளி டம் பகுதியில் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டனர். இதில் மகேந்திரப்பள்ளி, அளக்குடி, எருக்கூர், எலத்தூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 4 பெண் மற்றும் ஒரு ஆண் உள்பட 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய் யப்பட்டது. அவர்கள் 5 பேரும் மயிலாடு துறை அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டனர். கொள்ளிடம் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே கொள்ளிடம் அருகே வெட்டாத்தங்கரையை கிராமத்தைச் சேர்ந்த 5 பெண்கள் மற்றும் 4 ஆண்கள், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து விட்டு ஒரு காரில் வந்த போது, கொள்ளிடம் சோதனைச் சாவடியில் அவர்க ளிடம் காவல்துறையினர் விசாரித்த போது சென்னையிலிருந்து வரவில்லை விருத்தா சலத்தில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு வருவதாக தெரிவித்த தையடுத்து அவர்கள் வீடுகளுக்குச் சென்ற னர். இந்நிலையில் அவர்கள் சென்னையிலி ருந்து வந்த தகவல் கிடைத்ததையடுத்து புதுப்பட்டினம் காவல்துறையினர், வெட்டாத் தங்கரைக்குச் சென்று கொரோனா மற்றும் சமூக தொற்று பரவ காரணமாக இருந்ததாக கூறி 3 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

;