தரங்கம்பாடி, ஜூன் 01- நாகை மாவட்டம், திருக் கடையூரில் இந்திய தொழிற் சங்க மையத்தின் (சிஐடியு) அமைப்பு தினத்தையொட்டி கட்டுமான சங்கம் சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி சனியன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலா ளர் ரவிச்சந்திரன் கொடி ஏற்றி உரையாற்றினார். சங்க நிர்வாகிகள் லெட்சுமணன், ரவி, அமுல் காஸ்ட்ரோ, சரவணன், உதயக்குமார், செல்வம் (போக்குவரத்து சங்கம்), கோவிந்தசாமி, காபிரியேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.