tamilnadu

img

சாரண ஆசிரியர்க்கு விருது

 சீர்காழி, ஆக. 14- நாகப்பட்டினம் மாவட்டம் ஆச்சா ள்புரம் மேல்நிலைப் பள்ளியில் பட்ட தாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர்  அசோக்குமார். இவர் கடந்த 1993-ம்  ஆண்டு முதல் தான் பணியாற்றிய பள்ளி யில் சாரணர் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.  தற்போது ஆச்சாள்புரம் பள்ளியிலும் சாரணர் அமைப்பின்  ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். மேலும், சீர்காழி கல்வி மாவட்டத்தின் பாரத சாரண-சார ணியர் அமைப்பின் மாவட்ட பொருளாளராகவும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலச் செயலாளராகவும் இருந்து வருகிறார். தற்போது தமிழக அரசால் இவ்வாண்டு முதல் சாரணர் அமைப்பில் நீண்டகால சேவை செய்தவருக்கான மாநில விருதுக்கு நாகை வருவாய் மாவட்ட அளவில் தேர்வு  செய்யப்பட்டுள்ளார். மாநில விருதுக்கு தேர்வு செய்ய ப்பட்ட ஆசிரியர் அசோக்குமாருக்கு சீர்காழி மாவட்ட  கல்வி அலுவலர் குமார், பள்ளி தலைமை ஆசிரியர்  மல்லிகா மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.