tamilnadu

விவசாயிகளை ஏமாற்றி ரூ.100 கோடி சுருட்டியவர்

கும்பகோணம்,மே 9- கரும்பு விவசாயிகளை ஏமாற்றி கையெழுத்து பெற்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் 100 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட திரு ஆரூரான் சர்க்கலை ஆலை குழுமங்களின் தலைவர் ராம் வி.தியாகராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வருபவர் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை அதிபர் ராம் வி. தியாகராஜன். திரு ஆரூரான் குழுமத்திற்கு, சொந்தமான நான்கு ஆலைகளில், விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்த வகையில் கொடுக்க வேண்டிய 500 கோடி ரூபாய்க்கும் மேல் நிலுவைத் தொகையாகவே உள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வனிடம், வேப்பூர் தாலுக்கா கச்சிமயிலூர் கிராமத்தை சேர்ந்த கரும்பு விவசாயி ஸ்டாலின் என்பவர், திரு ஆரூரான் சர்க்கரை ஆலைத் தலைவர் தியாகராஜன் மீது மோசடி புகார் ஒன்றையும் அளித்தார். அதில், தனது பெயரில் இருவேறு வங்கிகளில், 18 லட்ச ரூபாய் கடன்பெற்று மோசடி செய்திருப்பதாகவும், தான் வாங்காத கடனுக்கு, அதனை திருப்பிச் செலுத்துமாறு வங்கிகள் நிர்பந்திப்பதாகவும், தெரி வித்திருந்தார். நிலுவைத் தொகையை வழங்க, தன்னிடம் கையெழுத்து பெற்ற ஆவணங்களை வைத்து, சர்க்கரைஆலை அதிபர் ராம் வி. தியாகராஜன் மோசடி செய்துவிட்ட தாகவும், கரும்பு விவசாயி ஸ்டாலின் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.இந்த மனுவை, கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு ஆட்சியர் அன்புச்செல்வன் அனுப்பினார்.இதனை உடனடியாக விசாரித்து, நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, கடலூர் குற்றப்பிரிவு டிஎஸ்பி பழனி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் வைத்து, ராம் வி. தியாகராஜனை கைது செய்தனர். இவர் மீது 4 பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கரும்பு விவசாயிகளிடம் 100 கோடிரூபாய் அளவிற்கு மோசடி செய்திருப்ப தாகவும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்தார்.திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் மற்றும் வங்கிகள் இணைந்து நடத்திய கடன் மோசடி வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று கும்பகோணம் பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 

;