tamilnadu

img

அழகாக முடிச்சவிழ்க்கிறார் கஸ்தூரி ரங்கன்!

தேசிய கல்விக்கொள்கை வரைவு 2019-ஐ உருவாக்கிய குழுவின் தலைவரான கஸ்தூரி ரங்கனின் விரிவான நேர்காணல் இந்து தமிழ் ஏட்டில் வெளியாகியுள்ளது. இந்திய கல்வி முறையில் முழுமையான மாற்றம் தேவைப்படு கிறது என்று முன்மொழியும் இவர் தமது தலைமையிலான இந்தக்குழு எதனடிப்படை யில் அறிக்கையை தயாரித்துள்ளது என்று விவரித்துள்ளார். இஸ்ரோ அமைப்பில் இவர் பணியாற்றிய போது விண்ணை நோக்கி பறக்க வைத்த விண்கலங்களை விட சிரமமான பணியை தாம் மேற்கொண்டிருப்பது போல் கஸ்தூரி ரங்கன் கதை அளந்திருக்கிறார். இந்தக்குழுவில் இவர் உட்பட யாரும் தேர்ந்த கல்வியாளர்கள் இல்லை என்பதை மட்டும் அவர் சொல்லாமல் தவிர்த்திருக்கிறார்.

மூளையை வசப்படுத்த...

மூன்று வயதிலிருந்து எட்டு வயதுக்குட் பட்ட குழந்தைகள்தான் தமது குழுவின் இலக்கு என்பதை அவர் வெளிப்படையாகவே சொல்லி யிருக்கிறார். 3லிருந்து 6 வயதிற்குள் குழந்தைக ளின் மூளையில் 85 சதவீதம் பகுதி பக்கு வப்படுத்தப்பட்டு விடுகிறது என்று கூறும் அவர் ஆர்எஸ்எஸ் மற்றும் கார்ப்பரேட் முதலாளி களின் சித்தாந்தங்களுக்கேற்ப பள்ளிக்  குழந்தைகளின் மூளையை பக்குவப்படுத்து வதே தமது நோக்கம் என்று சொல்லாமல் சொல்கிறார். இந்த வயதில் குழந்தை தாயிடமிருந்து மொழியை கற்கிறது என்று ஒப்புக்கொள்ளும் அவர் தாய்மொழி வழியாகவே அறிவு வளர்ச்சி சரியாக தகவமைக்கப்படும் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். அதனால்தான் ஆறாம் வகுப்பிலேயே மூன்று மொழிகளை குழந்தைகளின் மூளையில் திணிக்கும் வேலையை இவரது குழுவின் பரிந்துரை செய்யத் துடிக்கிறது.  விளையாட்டின் மூலமாகவும், பொருட்க ளை கேட்டு தெரிந்து கொள்வதன் மூலமும் குழந்தைகள் அறிவு வளர்ச்சி பெறவே செய் கின்றனர். விளையாட்டின் மூலம் பயிற்று விப்பது வழக்கமான கல்விப் பயிற்சி அல்ல என்று கூறும் அவர் பள்ளிகளில் சேர்த்து சொல்லித் தருவதுதான் கல்வி என்கிறார். குழந்தைகள் விளையாட்டின் மூலம் பல்வேறு ஆரம்ப கட்ட அறிவை இயல்பாக பெறுகின்ற னர். இந்த குழந்தைகளை பள்ளியில் கொண்டு போய் அடைப்பதன் மூலம் இயல்பான அறிவு வளர்ச்சி தடைபடும் என்பதை அவர் ஏற்கத் தயாராகயில்லை. 

இல்லை என்று கூறிக்கொண்டே...

பள்ளிகளை மூடுவது தங்களது நோக்கம் அல்ல என்று கூறிக்கொண்டே அருகமை பள்ளிகளுக்கு ஆப்பு வைக்கிறார். இப்போ துள்ள பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதி யில்லை என்பதை இவர் ஒப்புக் கொள்கிறார். அவற்றை ஏற்படுத்துவதற்கு பதிலாக தரம் உயர்த்தப்பட்ட பெரிய பள்ளிக்கூட வளா கங்கள் அவசியம் என்கிறார். இப்போதிருக்கும் பெரும்பாலான பள்ளிகளை மூடிவிட்டு தரமான பள்ளிக்கூடங்கள் ஆங்காங்கே ஒன்றி ரண்டு இருந்தால் போதும் என்பதுதான் இவரது பரிந்துரை. இந்த பள்ளிகளை சமுதாயத்தி னரும் கண்காணிக்க வேண்டும் என்று இவர் கூறுவதன் பொருள் ஆர்எஸ்எஸ் கூறும் சமுதா யம். அதாவது அவர்களது பிரச்சாரகர்கள் என்பதை புரிந்து கொள்வது கடினமல்ல. 

தனிச்சலுகை கூடாது
றித்து எதுவும் குறிப்பிடாத இவர் இன்னும் 20 ஆண்டுகளில் மிகச்சிறந்த அறிவாற்றல் தலித் மக்கள் தங்களுக்கென்று தனிச்சலுகை எதுவும் கேட்க மாட்டார்கள் என்று நினைப்ப தாக கூறியுள்ளார். தனிச்சலுகை கூடாது என்பது தனது விருப்பம் என்றும் கேட்டாலும் கிடைக்காது என்பது தமது திட்டம் என்றும் அவர் தன்னடக்கம் காரணமாக கூறவில்லை.  ஏன் இத்தனை தேர்வுகள் என்று கேட்டால், இந்த மாதத்தில்தான் எழுத வேண்டும், இத்தனை முறைதான் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அடுத்தடுத்து எழுத வாய்ப்பு  தருகிறோம் என்கிறார். அதாவது கல்லூரி களில் இருக்கும் அரியர் போல இனி ஒன்றாம் வகுப்பிலும் அரியர் இருக்கும். கேட்டால் எல்லாம் டிஜிட்டல் மயமாகிறது என்கிறார் கஸ்தூரி ரங்கனார். இதற்கும் டிஜிட்டல் மயத்திற்கும் என்ன தொடர்பு என்று தெரிய வில்லை. ஒருவேளை அரியர் உள்ளவர்களு க்கு டிஜிட்டல் போர்டு வைப்பார்கள் போலி ருக்கிறது.  இந்தக் கொள்கையால் மாநிலங்களின் அதிகாரம் குறைக்கப்படாதா என்ற கேள்விக்கு கல்வித்துறையை கட்டுப்படுத்தும் நான்கு அல்லது ஐந்து அமைப்புகளுடன் மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபடும் என்று கூறுகிறார். இந்த அமைப்புகளும் மத்திய அளவிலானவைதான். இன்னும் ஒரு படி மேலே சென்று கல்வி முறையையும் பிற வற்றையும் ஒழுங்குபடுத்தும் பொறுப்பு பள்ளிக்கூடங்களில் விடப்படும் என்கிறார். அதாவது அரசுப்பள்ளிகளை விட தனியார் பள்ளிகளுக்கு அதிக அழுத்தம் தரும் இந்தக் கொள்கை கல்வியை முற்றிலுமாக தனியாரி டம் தருவதற்கே வகை செய்கிறது.  

ஜியோ பல்கலை தரத்துக்கு...
இப்போதுள்ள பல்கலைக்கழகங்களின் தரம் மிக மோசமாக இருக்கிறது என்று கஸ்தூரி ரங்கன் கோபப்படுகிறார். இதற்காகதான் இப்போதே ஆரம்பிக்கப்படாத ஜியோ பல் கலைக்கழகத்தை நாட்டின் சிறந்த பல்கலைக் கழகமாக மோடி அரசு தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியில் ஸ்டெர்லைட் புகழ், வேதாந்தா, பாரதி ஏர்டெல் போன்ற நிறுவனங்க ளும் இருந்தன. இவை அடுத்தடுத்து சிறந்த நிறுவனங்களாக தேர்வு செய்யப்படும். ஜியோ பல்கலைக்கழகத்தை தேர்வு செய்த முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவராகியிருக்கிறார் என்பதை அறிக.  மோடி சொன்னபடி நான்காம் தொழிற் புரட்சிக்கே இந்தியாவை தயார் செய்வதாகக் கூறியுள்ளார் கஸ்தூரி ரங்கன். நான்காம் தொழிற்புரட்சி நடந்து முடிகிறபோது பெரும் பகுதி மக்களை மீண்டும் தற்குறிகளாக மாற்றி வைத்திருப்பார்கள். 

நாக்பூர் ஜெராக்ஸ்
அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக் கட்டளையை முன்மாதிரியாக காட்டுகிறார் இவர். ஆனால் அமெரிக்காவில் தேசிய அளவில் கல்விக்கொள்கை என்று ஒன்று இல்லை. மாநில அரசுகள்தான் கல்விக்கொள் கையை தீர்மானிக்கின்றன என்று ஜவஹர், நேசன் போன்ற சர்வ தேச அளவிலான கல்வி யாளர்கள் கூறுகின்றனர்.  அனைத்திலும் இந்தியத்தன்மை மிகுந்தி ருக்க வேண்டும் என்று முடிக்கிறார் இஸ்ரோ கஸ்தூரி ரங்கன். நாக்பூர் ஆர்எஸ்எஸ் அலுவ லகம் அருகில் எதையும் இந்தியத் தன்மை யோடு எடுத்துத்தரும் ஜெராக்ஸ் கடை இருக்கிறதோ? 

சம்பவாமி யுகே! யுகே!
 

;