tamilnadu

img

தேனி : தனியார் மசாலா தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

தேனியில் மசாலா தயாரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கோடங்கிப்பட்டியில் ஈஸ்டன் எவரெஸ்ட் என்ற தனியார் மசாலா தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை 9 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேலை செய்யும் ஊழியர்கள், தீ அணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து போலிசார் மேற்கண்ட விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 


 

;