புதுதில்லி:
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று, ஐக்கிய நாடுகள் அவையின் சார்பில் ‘உலகயோகா தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த மாதத்தில் பல்வேறு யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு ஜூன் 21 அன்று விழா நிறைவு பெறும்.
ஆனால், தற்போது கோவிட்-19 நோய்த்தாக்குதல் தீவிரமாக இருப்பதால், வீடியோமூலமாக யோகா தினத்தை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ‘எனது வாழ்க்கை, எனது யோகா’ என்ற முழக்கத்தை முன்வைத்து, போட்டி ஒன்றைஅறிவித்துள்ளார்.அதாவது, யோகாவில் ஆர்வம் உள்ளவர்கள், க்ரியா ஆசனம், பிராணாயாமா, பாந்தா அல்லது முத்ரா ஆகிய 3 யோகா பயிற்சி பற்றிய காட்சிகளை 3 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ குறும்படமாகத் தயாரித்து, தங்களது வாழ்க்கையில் யோகா எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது பற்றிய சிறு குறிப்புடன் ஜூன் 15 தேதிக்குள் அனுப்பி வைப்பதுதான் அந்தபோட்டியாகும்.இந்நிலையில், வீடியோ தயாரிப்பதற்கான கால அவகாசம் குறைவாக இருப்பதாக பலரும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடம் முறையிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ‘எனது வாழ்க்கை, எனது யோகா’ வீடியோ போட்டிக்கு விண்ணப் பிப்பதற்கான அவகாசத்தை ஜூன் 21 வரைநீட்டித்து, மத்திய ஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.