tamilnadu

ஆறு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தேனி, ஆக.3- போடியில் திங்கள்கிழமை மாலை, கேரளாவிற்கு கடத்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஆறு டன் ரேஷன் அரிசியை குற்ற  பிரிவு காவல்துறையினர்  பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். போடி உட்கோட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த தகவ லின்படி போடி போஸ்பஜாரில் வசிக்கும் மாரியப்பன் மகன் சுப்பிரணி (55) என்பவ ரது வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் ஒரு அறை  முழுவதும் ரேஷன் அரிசி பதுக்கி வைத்தி ருந்தது தெரிந்தது. இது குறித்து உத்தமபாளையம் உண வுக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் உதயசந்திரன் 140 மூடைகளை பறிமுதல் செய்தார். பறி முதல் செய்யப்பட்ட அரிசி  அரசு  உண வுப்பொருள் கிட்டங்கியில் ஒப்படைக்கப் பட்டது. சுப்பிரமணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.