tamilnadu

img

தேனியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...

தேனி:
தமிழக அரசால் அறிமுகப் படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களையக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்சார்பில் தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டத்தலைவர் சி.நிலவழகன், மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கசெயலாளர் முத்துப்பாண்டி, ஓய்வூதியர் சங்க மாநிலத் துணைத்தலைவர் பா.ராமமூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்க மாநிலப் பொருளாளர் பெ.பேயத்தேவன், வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நாகராஜன், பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதிக் காப்பாளர் சங்கத் தலைவர் அழகுராஜா, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கிருஷ்ணசாமி, முத்தையா, வரதராஜன், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாவட்டக் கன்வீனர் ரங்கராஜ்உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மதுரை
மதுரை சம்பள கணக்கு அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் ஜெ. மூர்த்தி,மாவட்டச் செயலாளர் க. நீதிராஜா, மாநிலப் பொதுச் செயலாளர் ஆ. செல்வம், மாவட்டர் பொருளாளர் மு. ராம்தாஸ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல்
அரசு ஊழியர்களுக்கு தனியார் மூலம் சம்பளம் வழங்கும் திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய முறை தொடர வேண்டும்என்று வலியுறுத்தி திண்டுக்கல்லில் மாவட்டக் கருவூல அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில்  மாவட்டத் தலைவர் விஜயகுமார், மாவட்டச் செயலாளர்முபாரக் அலி  ராஜமாணிக்கம்,மாவட்டப் பொருளாளர் ராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.