tamilnadu

தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அக்டோபர் மாதம் முதல் மக்கள் நீதிமன்றம் செயல்படும்

வரும் அக்டோபர் முதல் வாரத்திலிருந்து மாநிலம் முழுவதும் சிறு சிறு அளவில் தொடர்ச்சியாக மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட உள்ளது. இதில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், திருவைகுண்டம், சாத்தான்குளம் மற்றும் விளாத்திகுளம் ஆகிய இடங்களில் இயங்கி வரும் நீதிமன்ற வளாகங்களில் வைத்து சிறுசிறு அளவில் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள மக்கள் நீதிமன்றத்தில் கலந்து கொண்டு தங்களுடைய வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு கண்டு பயன் பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, முதன்மைமாவட்ட நீதிபதி/தலைவர் லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

                     ***************

அபராத வட்டி தள்ளுபடி: கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் 

தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் ஒருமுறை கடன் தீர்வு திட்டத்தில் தவணை தவறிய உறுப்பினர்களுக்கு அசலையும், வட்டியையும் பெற்றுக் கொண்டு, அபராத வட்டியை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 3 மாத கொரோனா காலத்தில் இதுவரை ரூ.36 லட்சத்து 54 ஆயிரம் சங்க உறுப்பினர்களுக்கு தள்ளுபடி செய்துள்ளது. எனவே இத்திட்டத்தில் இணைந்து பயன் பெறுமாறு தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் தனராஜ் தெரிவித்துள்ளார்.

                          *************

காவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்கான தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். http://www.tnusrb.tn.gov.in/about_us.htm என்ற இணையதளத்தில் செப்.26 முதல் அக்டோபர் 26 வரை விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 13-ல் எழுத்துத் தேர்வு நடக்கும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது. 

;