தூத்துக்குடி, மே 24-தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் கிளான்ஸ் ஜேக்கப் ஆசீர். இவர், மணியாச்சியில் உள்ளபஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வியாழனன்று தனதுகுடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில், இரவு 11 மணியளவில் அவரது வீட்டில் நிறுத்தியிருந்த 2 மோட்டார் பைக்குகள் திடீரென தீப்பற்றி எரிந்தது.இதையறிந்த அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றுள்ளனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். பைக்குகள் நிறுத்தியிருந்த இடம் அருகே இருந்த ஸ்விட்ச் போர்டில் மின்கசிவு ஏற்பட்டு மோட்டார் பைக்குகள் தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப் பதிந்துவிசாரணை நடத்தி வருகிறார்.