tamilnadu

இடைவெளியை கடைப்பிடிக்காத கடைக்கு சீல்

தூத்துக்குடி, ஜூன் 21- தூத்துக்குடியில் சமூக  இடைவெளியை கடைப் பிடிக்காத கடைக்கு மாநக ராட்சி அலுவலர்கள் பூட்டி சீல்  வைத்தனர். கொரோனா நோய்த்தொ ற்று பரவுதலை தடுக்கும் வித மாக பல்வேறு பாதுகாப்பு நட வடிக்கைகள் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் எடுக் கப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறது. மேலும் வெளி யில் செல்லும் போது  முகக் கவசம் அணியாதவர்க ளுக்கு அபராதமும், சமூக  இடைவெளியை கடைபி டிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஞாயி றன்று தெற்கு புதுத்தெரு பகு தியில் அமைந்துள்ள கடை  ஒன்றில் சமூக இடைவெ ளியை கடைபிடிக்காமல் செயல்படுவதாக மாநக ராட்சிக்கு தகவல் கிடைத்தது.  எனவே சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று விசாரணை  நடத்தியதில் சமூக இடை வெளியை கடைபிடிக்காமல் செயல்படுவது தெரிய வந்தது. தொடர்ந்து தூத்துக் குடி மாநகராட்சி அலுவ லர்களால் அந்த கடை பூட்டி  சீல் வைக்கப்பட்டது.