tamilnadu

img

அபராதத் தொகை வசூலுக்கு எதிர்ப்பு....பஜாஜ் நிதி நிறுவனம் முற்றுகை

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பஜாஜ் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர் தூத்துக்குடி பெரிய பள்ளிவாசல் அருகே வணிக வளாகத்தில் பஜாஜ் ஃபின்சர்வ் என்னும் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று செல்போன், டிவி போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கியவர்களுக்கு கடந்த 3 மாதமாக அபராதத்(பெனால்டி) தொகை வசூலித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு மூன்று மாதங்கள் தவணை செலுத்த வேண்டாம் என்று அறிவித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் தவணை செலுத்தாமல் இருந்துள்ளனர்.

ஆனால் அரசு உத்தரவை மீறி இந்நிறுவனம் பெனால்டி வசூலித்துள்ளது. ரூ.4ஆயிரத்திற்கு 920 ரூபாயும், 2ஆயிரத்திற்கு 560 ரூபாயும் பெனால்டி தொகையாக அந்நிறுவனம் வசூலித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்கள் திரளானோர் அந்த நிதி நிறுவனத்தை செவ்வாயன்று காலை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மத்தியபாகம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனிடையே நிதி நிறுவனம் மூடப்பட்டு அங்கிருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

;