tamilnadu

img

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் மந்தவாடி ஊராட்சிக்கு உட்பட்ட ரோட்டுப்புதூரில் 30-க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கழிவுநீர்,மழைநீர் வெளியேற கழிவு வசதி இல்லை. மழைக் காலங்களில் மக்கள்பெரும் சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

இதனையடுத்து அகில விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை வெள்ளியன்று ரோட்டு புதூர்மக்கள் முற்றுகையிட்டனர். சங்கத்தின்மாவட்டச் செயலாளர் கே.அருள்செல் வன், ஒன்றியத் தலைவர் முருகேசன், கார்த்திக்ராஜா, பழனிச்சாமி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கருணாகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சிவமணி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு வாரத்திற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.