தூத்துக்குடி, மே 27- தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இராமகிருஷ்ணன் (51). இவரது சகோதரர் கெங்கை(35). இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த ஜோதி என்பவருடைய தோட்டத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் செவ்வாயன்று ஜோதியின் தோட்டத்தில் ஏற்கனவே வேலைபார்த்து வந்த நடராஜன்(70) என்பவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட இருவரையும் விவசாயம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்துள்ளார். இதில் இராமகிருஷ்ணனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சகோதரர் கெங்கை அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இதுகுறித்து புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் வழக்குப் பதிந்து நடராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.