tamilnadu

img

சுராக்காப்பட்டி வரத்துக்கால்வாய் தூர்வாரும் பணிகள் துவக்க விழா

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் தோப்பூரணி, சுராக்காப்பட்டி ஊராட்சியில் ஊருக்கு நூறு கை திட்டத்தின் கீழ் சுராக்காப்பட்டி வரத்துக்கால்வாய் தூர்வாரும் பணிகள் துவக்க விழா, விளாத்திக்குளம் பேரூராட்சியில் மறுகால் ஓடை தூர்வாரும் பணி துவக்க விழா, சனியன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்  சந்தீப் நந்தூரி  கலந்து கொண்டு, சுராக்காப்பட்டி ஊராட்சியில் வரத்துக்கால்வாய் தூர்வாரும் பணிகளையும், விளாத்திக்குளம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட மறுகால் ஓடை தூர்வாரும் பணிகளையும் துவக்கி வைத்தார். விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார்.