tamilnadu

தூத்துக்குடி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு....

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் எல்கேஜி முதல் 12 வகுப்பு வரை 7 ஆயிரத்து 99 மாணவ மாணவியர்கள் அரசு பள்ளிகளிலும்11 ஆயிரத்து 995 மாணவ மாணவியர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் 3046 மாணவ மாணவியர்கள் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் வகுப்புக்கான சேர்க்கையில் தனியார் பள்ளிகளை விட அதிகமாக அரசு பள்ளியில் 2532 மாணவ மாணவியர்களும் அரசு உதவி பெறும் பள்ளியில் 3 ஆயிரத்து 838 மாணவ மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோன்று பதினொன்றாம் வகுப்புமாணவர் சேர்க்கையில் அரசு பள்ளியில்2302 மாணவ-மாணவிகளும் அரசு உதவி பெறும் பள்ளியில் 4 ஆயிரத்து 475 மாணவ மாணவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர் 11ஆம் வகுப்பு பொருத்தவரை தனியார் பள்ளியில் 1069 மாணவ மாணவிகள் மட்டுமேசேர்க்கப்பட்டுள்ளனர் என தூத்துக்குடி மாவட்ட முதல்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. மொத்தத்தில் கரோனா வைரஸ் தொற்று விளைவாக அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

;