tamilnadu

வன உயிரினங்களால் ஏற்படும் பாதிப்புக்கு நிவாரணம் அதிகரிப்பு.... அமைச்சர் ராமச்சந்திரன்....

சென்னை:
வன உயிரினங்களால் ஏற்படும் பாதிப்புக்கான நிவாரணத் தொகை 5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த மானியக்கோரிக்கை விவாதங்களுக்குப் பிறகு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்," மனித வன உயிரின மோதல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மனித உயிர்கள் காயமடைதல் போன்ற சேதங்களை தவிர்க்க இயலாமல் போகிறது. ஆகவே இந்த நிகழ்வுகளில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும், நிரந்தர இயலாமை ஏற்படும் சம்பவங்களிலும் தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகை ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றார்.தென்மாவட்ட யானைகள் வாழ்விடங்களை பாதுகாக்கும் வகையில் அகத்தியர் மலையில் யானைகள் காப்பகம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் தமிழ்நாட்டில் அழிந்து வரும் நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு இனத்தையும் அதன் கடல்வாழ் இடங்களையும் பாதுகாக்கும் வகையில் 'கடற்பசு பாதுகாப்பகம்' மன்னார் வளைகுடா பாக் நீரிணை பகுதியில் ஏற்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

வனத்துறையில் வன பாதுகாப்பு மற்றும் வன குற்றங்களை எளிதில் கண்டறிய மோப்பநாய் பிரிவுகள் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஏற்படுத்தப்படும்.கடல்வாழ் விலங்கு வேட்டை தடுத்தல் மற்றும் கடத்தல் உள்ளிட்ட கடல்வாழ் உயிரின குற்றங்களுக்கு என்று சிறப்பு கடல்சார் உயர் இலக்கு படை ஒன்று உருவாக்கப்படும்.தமிழ்நாட்டின் வனப் பகுதிகளில் காணப்படும் அன்னிய  தாவரங்களை அகற்றுவது மற்றும் அவ்வாறு அகற்றப்பட்ட வனப்பகுதிகளை நல்ல வழிக்கு கொண்டு வருவது தொடர்பாக தனியாக கொள்கை வகுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்தில் பணி புரிந்துவரும் ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வரும் நிலுவையில் உள்ள திருத்திய ஊதியம் இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் இதன் மூலம் 212 பணியாளர்கள் பயன்பெறுவர் என்றும் அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.